கடலூர்:
மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.ரங்கநாதன்(59),
இவரது வீட்டின் அருகே 47 வயதுடைய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வசித்து வந்தார். பெற்றோர் இறந்து விட்டதால் அந்த பெண் தனது உறவினருடன் வசித்து வந்தார். உறவினர் பெண்ணும், அவரது கணவரும் மாற்றுத்திறனாளி பெண்ணை கவனித்து வந்தனர்.
பாலியல்
பலாத்காரம் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி உறவினர் பெண்ணும், அவரது கணவரும் வேலைக்கு சென்று விட்டதால் மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த ரங்கநாதன், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஓடி விட்டார். வாய் பேச முடியாத முடியாதவர் என்பதால் மாற்றுத்திறனாளி பெண்ணால் சத்தம் போட முடியவில்லை.
போலீசில் புகார்
உறவினர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது மாற்றுத்திறனாளி பெண் நடந்த சம்பவத்தை உறவினரிடம் தெரிவித்தார். அவரது உறவினர் இது தொடர்பாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரங்கநாதனை கைது செய்தனர்.
கைது செய்தனர்
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்புக்கான தண்டனை) மற்றும் 376 (2) (எல்) (மனநிலை அல்லது உடல் ஊனமுற்ற ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது
ஆயுள் தண்டனை
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ரங்கநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். இயற்கை மரணம் அடையும் வரை ரங்கநாதன் சிறையில் இருக்க அவர் உத்தரவிட்டார்.. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி ரங்கநாதனுக்கு ரூ.30,00 அபராதம் விதித்து உத்தரவிட்டார். குற்றம் நடந்த மாதத்தில் அதே தேதியில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reporter : Vijay, Chennai