Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

MKStalin-16446500433x2-2

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் சார்பில், தென்மண்டல துணைவேந்தர்கள் கூட்டம் இன்று  துவங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த தென் மண்டல துணைவேந்தர்கள் கூட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நாடு முழுவதும்தரமான கல்வியை மாணவர்களுக்கு கொண்டு செல்வது குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட இருக்கின்றது. பாரதியார் பல்கலை கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலமாக தமிழை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது, தமிழகத்தில் உள்ள பல்கலைகள் மற்ற மாநிலங்களுக்கு முன்னொடியாக விளங்குகின்றது எனவும்தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குகின்றது எனவும் தெரிவித்தார். 2020 – 21 தேசிய கல்வி நிறுவனங்களுக்கான கட்டமைப்பில் தமிழக கல்லூரிகள் முதல் 100 இடத்தில் இருக்கின்றது எனவும், தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 51.4 சதவீதமாக என இருக்கின்றது எனவும், தேசிய அளவிலான சராசரியை விட இது இரு மடங்கு அதிகம் எனவும் தெரிவித்தார்.

பெண்கள் சமூக ரீதியாக, பொருளாதர ரீதியாக விடுதலை அடைய வேண்டும் என்பது திராவி இயக்க கொள்கை என தெரிவித்த அவர், பெண்களுக்கு தனி பல்கலை, உதவி தொகை, அகில இந்திய தேர்வுகளுக்கு உதவி தொகை என கல்வியில் பெண்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுக்கின்றது எனவும் தெரிவித்தார்.

நிதி நிலை அறிக்கையில் உயர் கல்விக்கு 5,369 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், உயர்கல்வி சென்றடையாத இடங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும், உயர்கல்வி பாடங்கள் தமிழ்மொழியில் மாற்றம் செய்ய 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

பல்கலைகழக துணை வேந்தர்கள் அறிவியல் பூர்வமான சிந்தனையை மாணவர்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு தனது அதிகாரத்தை பயம்படுத்தி பிற்போற்கு கருத்துகளை புகுத்தும் போக்கு கவலைக்குரியது எனவும் தெரிவித்தார். கல்வி என்பது மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும், மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் எனவும் பேசினார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp