
கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு வரலாறு ஆசிரியராக முரளிதரன் (46) 2001 ம் ஆண்டில் இருந்து ஆசிரியராக பணியாற்றி கடந்த எட்டு ஆண்டுகளாக கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் ஆபசமான வார்த்தைகள் கொண்டு பேசுவதும்,தவறாக தொடுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
