சென்னை: அணிலால் மின் தடை ஏற்படும் என்பதை புள்ளி விவரங்களுடன் எங்கும் வந்து நிரூபிக்க தயாராக உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடர்ச்சியாக மின் தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் செய்ததாலும் மின்கம்பிகளுக்கு இடையில் அணில்கள் விளையாடுவதாலும் மின் தடை ஏற்படுகிறது என
இதையடுத்து சமூகவலைதளங்களில் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை கிண்டல் செய்தனர். மேலும் அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் கிண்டல் செய்திருந்தார்.
பராமரிப்பு
இந்த நிலையில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் 9 மாதங்களாக மின் வாரியத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் மின் மாற்றிகள் உள்ளிட்ட கருவிகளில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. இது சரியானதும் தடையில்லா மின்சாரத்தை திமுக அரசு கொடுக்கும்.
மின்கம்பி
அணில் போன்றவை ஆபத்து அறியாமல் மின் கம்பிகளில் தாவி விளையாடும் போது சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு மின்மாற்றிகள் டிரிப் ஆகிவிடுகின்றன. அமெரிக்காவில் அதிக மின்தடை அணில்களால் ஏற்படுகின்றன. இதை அந்நாட்டு பத்திரிகைகளே தெரிவித்துள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
இழப்பீடு
அவர்களும் இதையே புள்ளி விவரங்களுடன் கருத்துகளை தெரிவித்த கருத்துகள் அடிப்படையில்தான் மின் தடைக்கு அணிலும் ஒரு காரணம் என நான் சொன்னேன். அதிமுக ஆட்சியில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மின் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது தந்தை இழப்பீடு கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகினார்.
நீதிபதி
அந்த வழக்கில் அணில்களால் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய போன போதுதான் சரவணன் உயிரிழந்ததாக தமிழக மின்வாரியம் சார்பில் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அணில்களால் விபத்து நடக்குமா என்பதை அறிவதற்காகவே மதுரை ஹைகோர்ட் கிளை நீதபதியே சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அணில்களால் மின் தடை ஏற்படும், மின் கம்பிகள் உரசும் போது விபத்தும் ஏற்படும் என்பதை உணர்ந்தே அவர் தீர்ப்பளித்துள்ளார் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.