சென்னை: ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குநர் பா. ரஞ்சித்தின் அடுத்த தரமான சம்பவம் தான் சார்பட்டா பரம்பரை.
பாக்சிங் போட்டியை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவுக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பட்டா பரம்பரை
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடிப்பில் பாக்சிங் கதையை மையப்படுத்தி உருவாகி உள்ளது சார்பட்டா பரம்பரை. அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வரும் ஜூலை 22ம் தேதி படம் வெளியாகிறது.
சூர்யா வெளியீடு
நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். சார்பட்ட பரம்பரை டிரைலரின் ஒவ்வொரு ஃபிரேமும் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளன.
மொரட்டு உடம்பு
இந்த படத்திற்காக சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து மொரட்டு தேகத்துடன் நடிகர் ஆர்யா கடின உழைப்பு போட்டு நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரையின் மானத்தை நடிகர் ஆர்யா பாக்சிங் பண்ணி ஜெயிப்பது தான் படத்தின் கதை என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. இந்த படத்திற்காக ஏகப்பட்ட விருதுகளை ஆர்யா வெல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பா. ரஞ்சித் இஸ் பேக்
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குநர் பா. ரஞ்சித் பாலிவுட்டில் பிர்சா முண்டா படத்தை இயக்கப் போவதாக அறிவித்து இருந்தார். அந்த படம் சற்றே தாமதமான நிலையில், மீண்டும் கோலிவுட்டில் நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி உள்ளார். தயாரிப்பு பணிகளில் பிசியாகி இருந்த பா. ரஞ்சித் இயக்குநராக மீண்டும் நல்லவொரு கம்பேக் கொடுப்பார் என தெரிகிறது.