
கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது வழக்கம். அந்த வகையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள சிக்னலில் விதிகளை மீறும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வந்தனர். அப்போது அங்கு போலீசார் உடையில் இல்லாத தாடியுடன் கூடிய ஒருவர், வாகனங்களை மறைத்து அபராதம் வாங்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து அங்குள்ள தலைமை போக்குவரத்து காவலர் ஒருவர் விதிகளை மீறும் வாகனங்களை மறித்து போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் அனுப்புகிறார். பின்னர் வாகன உரிமையாளர்கள் காவல் உதவி ஆய்வாளரிடம் பேச்சுவர்த்தைக்குப்பின் காவலர் உடை இல்லாத நபரிடம் அனுப்பி வைக்கிறார்.அந்த நபரிடம் வாகன உரிமையாளர்கள் பணத்தை கொடுத்து செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. இவர் யார்..!போலீசார்கள் இவரை உதவிக்கு வைத்துள்ளார்களா..! என்பது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.