Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

பெட்ரோல், டீசல் கிடுகிடு விலை உயர்வு: ரூ.107ஐ தொட்ட பெட்ரோல், ரூ.103ஐ கடந்த டீசல்..!!

image-1

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்து வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.105.74க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.101.92க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.106.04க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.102.25க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp