
புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம்ரவி. இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்தநிலையில் ஜாமீனில் வெளியே இருந்து வந்த பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோரை கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.போலீசாரின் விசாரணையில் ரவுடி திப்லான் கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்த இந்த இரட்டை கொலை நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், மற்றொரு கொலை வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினோத், தீனு ஆகியோரது சதி திட்டத்தின்படி கூலிப்படை வைத்து பாம் ரவி கொலை செயப்பட்டது தெரியவந்தது.

மேலும் பிரவீன், அருண் ஆகிய 2 பேரும் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாம் ரவி கொலையில் வாணரப்பேட்டையை சேர்ந்த பா.ஜ.க இளைஞர் அணியை சேர்ந்த விக்கி என்கின்ற ஷார்ப் விக்கியை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை கலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.