Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

பிரசவ அறுவை சிகிச்சையை கவனக்குறைவாக மேற்கொண்ட மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை கோரி வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு..

High-Court-Updatenews360

பிரசவ அறுவை சிகிச்சையை கவனக்குறைவாக மேற்கொண்ட அரசு மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கவும், 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பூசாரிவளவு கிராமத்தை சேர்ந்த கே.சகுந்தலா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது 2020 டிசம்பர் 16ம் தேதி எடப்பாடி அருகே உள்ள ராயனம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டபோது, சுக பிரசவம் என்ற நிலை இருந்தும், தொலைபேசி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற செவிலியர், அறுவை சிகிச்சை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

உரிய அனுபவம் எதுவும் இல்லாமல் நான்காம் தர சிகிச்சை, பெருங்குடல் வாய், சுருக்குதசை ஆகிய பகுதிகளில் அதிக ஆழமாக வெட்டப்பட்டது போன்ற காரணங்களால் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதனால் மிகவும் பலவீனமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பொது சுகாதார துறை இயக்குனர், சேலம் பொது சுகாதார துறை துணை இயக்குனர் ஆகியோரை தானாக முன்வந்து சேர்க்க உத்தரவிட்டதுடன், வழக்கு குறித்து அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp