Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

பழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்.. உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அதிர்ச்சி!

jayanthi-death-rumours-759-1627275311

பெங்களூரு: பழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். அவருக்கு வயது 76. கர்நாடக மாநிலம் பெல்லாரியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஜெயந்தி. 1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார்.கன்னட சினிமாவின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கன்னட, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி, நாகேஷ், ஜெமினி கணேசன்

தமிழில் சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், ஜெமினி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார் ஜெயந்தி. எதிர் நீச்சல், இருகோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா, நீர்க்குமிழி, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நமிதா ஐ லவ் யூ

கடைசியாக அன்னை காளிகாம்பாள், நமிதா ஐ லவ் யூ என்ற படத்தில் நடித்தார் நடிகை ஜெயந்தி. இதுவரை 7 முறை சிறந்த நடிப்புக்காக கர்நாடக அரசின் விருதை பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜெயந்தி.

பெங்களூரு மருத்துவமனை

உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் நடிகை ஜெயந்தி காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயந்தி, பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஜெயந்தியின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு கன்னட சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp