ஆஸ்திரேலியா: தோனி பயிற்சியாளராக அவதாரம் எடுப்பது குறித்து முன்னாள் வீரர் பிராட் ஹாக் சூசகமாக தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார்.
ஆனால் அவர் இந்தாண்டு அல்லது அடுத்தாண்டுக்குள் ஓய்வு பெற்றுவிடுவார் என தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை அணி
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீண்ட காலமாக இருந்து வருகிறார் எம்.எஸ்.தோனி. இதுவரை 3 முறை சிஎஸ்கே அணிக்குக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்துள்ளார். தோனி இல்லையென்றால், சிஎஸ்கே அணியின் நிலைமை மிகவும் மோசமாக சென்றுவிடும் என்று கூறப்பட்டு வருகிறது.
தோனியின் அடுத்த ப்ளான்
இந்நிலையில், தோனியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். அவரிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், 2022-ம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தோனியைத் தக்கவைக்காவிட்டால் என்ன சூழல் நிலவும் என நினைத்துப் பாருங்கள். ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு அவரின் அனுபவம் தேவைப்படும் என்று கேட்டிருந்தார்.
ஹாக்கின் கருத்து
இதற்கு பதிலளித்த பிராட் ஹாக், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு எம்எஸ் தோனி செல்ல மாட்டார். ஏனென்றால் சிஎஸ்கே அணியின் மகாராஜா தோனி தான். அவர் அடுத்தாண்டு முதல் அணியில் வீரராகத் தொடராவிட்டாலும் கூட பயிற்சியாளராக தொடரலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மெகா ஏலம்
2022-ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். அதில் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் அடங்குவர். சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை, எம்.எஸ்.தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் முதல் தேர்வாகவும், அயல்நாட்டு வீரர்களில் டூப்ளசிஸ் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.