Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

நாளை முதல் இந்த கட்டணமும் அதிகரிக்கும்.. வாடிக்கையாளர்கள் அலர்ட்டா இருங்க..!

axisbank-17-1479387029-1546510224-1571747250-1625048467

ஆக்ஸிஸ் வங்கி அதன் எஸ்எம்எஸ் (SMS) மற்றும் மினிமம் பேலன்ஸ் (Minimum balance) கட்டணத்தினை உயர்த்தியுள்ளது.இந்த கட்டண உயர்வானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. ஆக ஆக்சிஸ் வங்கி (Axis bank) வாடிக்கையாளர்கள் இதனையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

கடந்த மே மாதம் முதல் இந்த வங்கியின் சில கட்டணங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில், நாளை முதல் எஸ் எம் எஸ்-க்கும் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

மினிமம் பேலன்ஸ் தொகை அதிகரிப்பு

தனியார் துறையை சேர்ந்த வங்கியான ஆக்ஸிஸ் வங்கி, அதன் வாடிக்கையாளார்கள் தங்கள் அக்கவுண்டில் வைத்திருக்கும் 10,000 ரூபாய்க்கு பதிலாக, குறைந்தபட்ச இருப்பு தொகையாக 15,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இதே பிரைம் மற்றும் லிபர்டி சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு மினிமம் பேலன்ஸ் என்பது 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

அபராதம் எவ்வளவு?

ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்காவிட்டால், குறையும் தொகையில் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அதே போல சராசரி பேலன்ஸ் 5,000 மற்றும் 7,500 ரூபாய்க்கு கீழ் இருந்தால், வங்கி உங்களுக்கு 800 ரூபாய் + வரி விகிதமும் சேர்த்து கட்டணமாக விதிக்கப்படலாம்.

குறைந்தபட்ச & அதிகபட்ச கட்டணம்

எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், மினிமம் பேலஸ் தொகை இல்லாவிடில் விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் என்பது 150 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதிகபட்ச கட்டணம் என்பது 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் கட்டணங்கள்

ஒவ்வொரு மாதமும் கட்டணமில்லாமல் 4 முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு எடுக்கும்போது ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 10 ரூபாய் வசூலிக்கப்படும். அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இது முன்னதாக 5 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்எம்எஸ் கட்டணம்

எஸ்எம்எஸ் அலர்ட்டுக்காக முன்னதாக மாதம் 5 ரூபாய் வீதம், காலாண்டுக்கு 15 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டது. எனினும் நாளை முதல் எஸ்எம்எஸ்-க்கு 25 பைசாவாகவும், இது அதிகபட்சம் 25 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1 முதல் அலுக்கு வரும் எனவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இது ஒன் டைம் பாஸ்வேர்டுகளுக்கு பொருந்தாது..

எஃப்டிக்கான வட்டி விகிதம்

இதற்கிடையில் ஜூன் 22 அன்று ஆக்ஸிஸ் வங்கி தனது வங்கி பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தினை மாற்றியமைத்துள்ளது. இது பலமுறை வட்டி விகிதத்தினை குறைத்த நிலையில், இந்த முறை மாற்றியமைத்துள்ளது. இந்த வட்டி விகிதம் 2.5% முதல் 5.75% ஆக திருத்தியுள்ளது. இதே மூத்த குடிமக்கள் 2.5% முதல் 6.50% வரையில் வட்டியினை பெறுவர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp