ஜெனீவா: கொரோனா தொற்றை போராடி அழிப்பதில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.. அந்த வகையில் 3 மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து வருகிறது.. உலகம் முழுவதும் 600 மருத்துவமனைகளில் ஆய்வக பரிசோதனைகளை ஹூ தொடங்கி உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் நிரந்தரமாக கண்டுபிடிக்கப்படவில்லை.. எனவே, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறதுமற்றொருபுறம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது..
கொரோனா
அந்த வகையில், ரெம்டெசிவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 4 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.. ஆனால், அவை பயனற்றவை என்று முடிவு வந்துள்ளன. அதேசமயம், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் சில மருந்துகள் கொரோனா பரவலை தடுக்கும் ஆற்றலை கொண்டு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
மருந்துகள்
அந்த வகையில், வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மேலும் 3 மருந்துகளை அடுத்தகட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்போவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.. அதாவது அர்டிசுனேட், இமடினிப், இன்பிளிக்சிமேப் ஆகிய மருந்துகளைதான் டெஸ்ட் செய்ய போகிறார்கள்..
நோய் எதிர்ப்பு சக்தி
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை இவை தடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த 3 மருந்துகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது…. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெட்ராஸ் அதானம்,
சிகிச்சை
“சாலிடாரிட்டி பிளஸ்” என்ற திட்டத்தின் கீழ் 3 மருந்துகள் மீதான ஆய்வக சோதனையை தொடங்கியுள்ளோம்… ஆர்டெஸ்யுனேட் மருந்து மலேரியா சிகிச்சைக்கு தரப்படுவது… அதேபோல இமாட்டினிப் சில வகை புற்று நோய்க்கு வழங்கப்படுவது.. இன்பிளிக்சி-மேப் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்புக்கு தரப்படும் மருந்துகள் ஆகும். இப்போது உலகம் முழுவதிலும் உள்ள 600 ஆஸ்பத்திரிகளில் இந்த மருந்துகள் மீதான ஆய்வக பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.