Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு…? நள்ளிரவிலும் தொடர் போராட்டம் : திமுக அரசை அதிரவைத்த செவிலியர்கள்!!

FINAL

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அப்போதைய அதிமுக அரசு மே மாதம் முதல் 3 கட்டங்களாக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணிக்கு நியமித்தது.

செவிலியர்கள் பணிநியமனம் : 2019-ல் MRB என்னும் தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுமார் 6,200 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நியமிக்கப்பட்டனர்.

முதல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் தற்காலிக பணி நியமன ஆணையை பெற்ற 2,750 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் கட்டமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இவர்களுக்கு மாதச் சம்பளம் 14 ஆயிரம் ரூபாயுடன் தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது சில ஆஸ்பத்திரிகளில் பணி புரியும் கொரோனா கால MRB செவிலியர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம் :

அதுமட்டுமின்றி கொரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணியமர்த்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் கொதிப்படைந்தனர். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வந்த 1000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 28-ந் தேதி உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp