சென்னை : சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்கிறார்.ரஜினிகாந்த்தின் லிங்கா திரைப்படத்தின் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சோனாஷி.
தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த சோனாஷி, தெலுங்கிலும் தனது தடத்தை பதிக்க தயாராகி வருகிறார்.
சிரஞ்ஜீவி
கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்ஜீவி கதாநாயகனாக நடித்து வருகிறார். மற்றொரு கதாநாயகனாக ராம்சரண் நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.
படப்பிடிப்பு விரைவில்
ஆச்சார்யா படத்தின் ஆக்ஷன் காட்சி மற்றும் ராம் சரண், பூஜா ஹெக்டேவின் பாடல் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது. கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதை அடுத்து, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுத் திட்டமிட்டுள்ளது.
சீரஞ்சீவிக்கு ஜோடியாக
இந்நிலையில், ஆச்சாரியப்படத்தில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாஷி சின்ஹாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் லிங்கா திரைப்படத்தில் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்திருந்தார் சோனாஷி.
லூசிஃபர் தெலுங்கு ரீமேக்
ஆச்சார்யா திரைப்படத்தைத் முடித்தக் கையோடு, மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமான லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்ஜீவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.