தலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆப்கானை முழுவதும் தலீபான்கள் கைப்பற்றினர். கடந்த 15ஆம் தேதி ஆப்கனை கைப்பற்றிய அவர்கள் தற்போது யார் ஆட்சி அமைப்பது என கலந்தாலோசித்து, ஆட்சி அமைக்க ஆரம்பித்துள்ளனர். தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் உட்பட அனைவரும் நாட்டை விட்டு தப்பி அண்டை நாடுகளுக்கு சென்றால் போதும் என முயற்சித்து வருகின்றனர்.
பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட அனைவரும் அங்கிருந்து வெளியேறவே துடிக்கின்றனர். நேற்று இடைக்கால மந்திரி சபையும் இடைக்கால பிரதமரையும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து முன்பு ஆட்சியின் போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகை யாளர்கள் போன்ற பலரை கைது செய்தும், கொலை செய்தும் வருகின்றனர்.
இடைக்கால அரசின் பிரதமரை தற்போது அறிவித்த தலீபான்கள் நேற்று பத்திரிகையாளர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்கள் முதுகில் காயம் ஏற்படும் அடையாளங்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டதன் காரணமாக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தலிபான்கள் ஆட்சியில் இனி வரும் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறதோ? என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.