சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 122 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர். கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை நோய் அதிகளவில் பாதிப்பு வருகிறது. மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், சர்க்கரை நோயாளிகளை எளிதில்
கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள், கண்ணை சுற்றி வீக்கம், வலி ஆகியவை இருக்கும். இதனால் கண் பறிபோகும் வாய்ப்பும் உள்ளது. பலர் கருப்பு பூஞ்சையால் மரணம் அடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை; கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பொது மக்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். தமிழகத்தில் 3,929 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கபட்டுள்ளனர்; இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்காக தமிழகம் முழுவதும் 7000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.