சென்னை: அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பானது 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக அதாவது ஓராண்டாக உயர்த்தப்படுகிறது என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்றைய தினம் தாக்கல் செய்தார். அதில் அவர் மகளிர் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கு 9 மாதங்களாக பேறு கால விடுப்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த விடுப்பானது ஓராண்டாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் மகளிர் பேறு கால விடுப்பு 6 மாதங்களாக உயர்த்தி மத்தியில் ஆளும் பாஜக 2014- 2019 ஆம் காலகட்டத்தில் சட்ட மசோதா தாக்கலானது.
இதற்கு ஏராளமான பெண்கள் வரவேற்பு தெரிவித்தனர். அது போல் அரசு ஊழியர்களுக்கு 3 மாதமாக இருந்த பேறு கால விடுப்பை 6 மாதங்களாகவும் பிறகு 9 மாதங்களாக 2016 ஆம் ஆண்டு உயர்த்தியவர் ஜெயலலிதா. 1980 ஆம் ஆண்டு முதல் 3 மாதங்கள் மட்டுமே இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை 2011 ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டார் ஜெயலலிதா.
இதையடுத்து 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில் 6 மாத பேறு கால விடுப்பை 9 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு 9 மாத பேறு கால விடுப்பை ஓராண்டாக உயர்த்தி வழங்கியுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு ஓராண்டுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பை உயர்த்தி வழங்கியுள்ளது திமுக அரசு. இதை பலரும் வரவேற்கிறார்கள். இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அறிவிக்கப்பட்டது. அது போல் இந்த பட்ஜெட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொட