சென்னை: நடிகர் ஆர்யா தன் வீட்டில் அமேஸான் பிரைம்மில் சார்பட்டா பரம்பரை படத்தை பார்க்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. கடைசியாக அவரது நடிப்பில் டெடி படம் வெளியானது.
இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்தார் நடிகர் ஆர்யா. இந்தப் படம் நேற்று இரவு அமேஸான் பிரைமில் வெளியானது.
ஆர்யாவின் அர்ப்பணிப்பு
படத்தை பார்த்த ரசிகர்கள் ஆர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார். குறிப்பாக உடலை வருத்திக்கொண்டு கதாப்பாத்திரமாகவே மாறிய ஆர்யாவின் அர்ப்பணிப்பு பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஆர்யாவுக்கு பாராட்டு
நான் கடவுள், அவன் இவன் பட வரிசையில் சார்பட்டா பரம்பரையும் அவரது கேரியரில் முக்கியமான ஒரு படமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் நடிகர் ஆர்யாவை பாராட்டி வருகின்றனர்.
தீயாய் பரவும் போட்டோ
இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது வீட்டில் அமர்ந்து அமேஸான் பிரைமில் தன்னுடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தை பார்க்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இந்த போட்டோவை அவருடைய அம்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ரஞ்சித்தின் வேலை சிறப்பு
மேலும் இப்போதுதான் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்தேன் சூப்பர் கேரக்டரைஸேஷன்ஸ்.. அனைத்து கதாப்பாத்திரங்களிடம் இருந்தும் அமேஸிங் பர்ஃபாமன்ஸ்.. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மனதை கவர்கிறது.. அவரது கேரியரில் பெஸ்ட் படம்.. இயக்குநர் ரஞ்சித்தின் வேலை சிறப்பானது என பதிவிட்டுள்ளார்.
லவ் யூ..
தனது அம்மாவின் இந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ள நடிகர் ஆர்யா, தேங்க் யூ சோ மச் மம்மி.. லவ் யூ என பதிவிட்டுள்ளார். ஆர்யா தன் வீட்டில் அமர்ந்து தனது படத்தை பார்க்கும் போட்டோ வைரலாகி வருகிறது.