கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் உரையின் போது பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டதால் ஆளுநர் தனது உரையை முடிக்காமல் பாதியில் வெளியேறினார்.
பொதுவாக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் முதல்நாள் ஆளுநர் உரை நடைபெறுவது நாடு முழுக்க சட்டசபை கூட்டத்தொடரில் வழக்கம். இந்த ஆளுநர் உரை என்பது மாநில அரசை புகழும் வகையிலும், அரசின் புதிய திட்டங்களை அறிவிக்கும் வகையிலும் இருக்கும்
மாநில அரசுதான் இந்த உரையை எழுதும். தமிழ்நாட்டில் கூட ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பெரியார், அண்ணாவை புகழ்ந்து பேச இதுவே காரணம். தமிழ்நாடு அரசுதான் இந்த உரையை எழுதியது.
ஆளுநர்
வெறுமனே உரையை வாசிப்பது மட்டுமே ஆளுநர் வேலை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்த நிலையில் இன்று முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கியது. ஆளுநர் ஜெகதீப் தன்கர் முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசை பாராட்டி தனது உரையை தொடங்கினார்.
கலவரம்
இதில் தேர்தலுக்கு பிந்தைய மேற்கு வங்க கலவரம் குறித்து பேசிய ஆளுநர் ஜெகதீப் தன்கர், மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் எல்லாம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அதிகாரம் இருந்த போது நடந்த கலவரம் மட்டுமே. அதன்பின் அரசு ஆட்சிக்கு வந்ததும் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது என்று கூறினார். மாநில அரசு எழுதிக்கொடுத்த வாசாகத்தை அவர் படித்தார். ஜெகதீப் தன்கரின் இந்த உரை பாஜகவை கோபம் அடைய செய்தது.
கோபம்
கலவரம் குறித்த உண்மைகளை பேசாமல், ஆளுநரை விட்டு அரசுக்கு குட் மார்க் போட சொல்கிறார்கள். இந்த உரையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி பாஜகவினர் கடும் அமளியில் ஈடுப்பட்டனர். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பி தொடர்ந்து பாஜகவினர் கத்திக் கொண்டே இருந்தனர். இதனால் ஆளுநர் முழுதாக தனது உரையை நிகழ்த்தாமல் பாதியில் வெளியேறினார்.
கலவரம்
ஆனால் ஆளுநர் உரையில் இதை பற்றி எதுவுமே இல்லை. ஆளுநர் உரையை அரசுதான் எழுதி கொடுக்கும். ஆனால் அதில் ஆளுநரின் கருத்துக்கள் இல்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. அதனால்தான் நாங்கள் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை காட்டி அமளியில் ஈடுபட்டோம். கலவரம் குறித்த உண்மையை அரசு மறைக்க பார்க்கிறது.
ஆளுநர்
ஆளுநர் இந்த கலவரத்தில் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் அவரை வைத்தே கலவரம் குறித்து எதிர்மாறாக பேச சொல்வது தவறு என்று சுவேண்டு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கொல்கத்தா கலவரம் குறித்து மக்கள் கொடுத்த புகார் அனைத்திலும் வழக்கு பதிய வேண்டும். கொல்கத்தா தலைமை செயலாளர் இதை முறையாக விசாரிக்க வேண்டும் என்று, கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.