காபூல்: ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகளை, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்கா முழுமையாக வெளியேற்ற வேண்டும்… இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தாலிபான்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர்… அமெரிக்கா தங்கள் ராணுவ படைகளை விலக்கி கொள்ள போவதாக அறிவித்த ஓரிரு நாட்களிலேயே தாலிபான்கள் எல்லா பகுதிகளையும் கைப்பற்றி விட்டனர்.. இதனால் ஆப்கானிஸ்தானில் ஒருவிதமான பதற்றமும், பதட்டமும், பரபரப்பும் நிறைந்த சூழல் நிலவுகிறது… இது தொடர்பான வீடியோக்கள் தினம்தோறும் சோஷியல் மீடியாவில் வெளியாகி கொண்டிருக்கின்றன.
தாலிபான்கள்
20 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையில் தாலிபான்கள் தங்களை கொண்டு போய் விட்டு விடுவார்களோ என்ற பீதியில், மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.. அதற்காக காபூல் ஏர்போர்ட்டில் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகிறார்கள்… பஞ்சசீத் என்ற இடத்தில் தாலிபான்கள் ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டமும் வெடித்துள்ளது.
அமெரிக்கா
இந்த நிலையில் அமெரிக்கா தன்னுடைய படைகளை வெளியேற்றுவதில் மிக தீவிரமாக கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறது… வரும் 30ம் தேதிக்குள் அனைத்து படை வீரர்களும் திரும்புவார்கள் என்று ஏற்கனவே அந்நாடு அறிவித்திருந்தது… ஆனாலும், இதுவரை முழுவதும் அமெரிக்கப்படைகள் ஆப்கானை விட்டு வெளியேறவில்லை. அதோடு ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் ஒருபகுதியை கட்டுப்பாட்டில் வைத்து அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி வருகின்றனர்.
மோசமான விளைவு
அதன்படி படைகளும் கடந்த 30ம் தேதிக்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. இப்படி கெடு விதித்துள்ளது மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு படைகள்
ஆனால், காலக்கெடு முடிவதற்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேல் சல்லிவன் தெரிவித்துள்ளார்.. ஆப்கானில் நடைபெறும் வன்முறைகளுக்கும், உயிரிழப்புக்களுக்கும் காரணமே வெளிநாட்டு படைகள் தான் என்று சொல்லும் தாலிபான்கள், ஆப்கானில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை புனரமைப்பதும் அவர்களுடைய பொறுப்பு என்கிறார்கள்..
அமெரிக்கா
அதுமட்டுமல்ல, வெளிநாட்டு படைகள் வெளியேறும் தேதியை மேலும் நீட்டிக்கக்கூடாது என்றும் படைகளின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும், அதன்பிறகு அவர்கள் எங்களுடன் நட்பாக இருக்கலாம், ஒரு புது அத்தியாயத்தை தொடங்க வெளிநாடுகளின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை…. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அது அடிப்படையான கடமையாக உள்ளது..
காரணம்
ஏனென்றால், ஆப்கானில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அவர்கள் தான் முழு காரணம் என்றும் கூறுகின்றனர். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனைத்து படைகளும் வெளியேற வேண்டும் என்று கூறப்படும் நிலையில், அமெரிக்க படைகள் வெளியேற மேலும் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது… ஆப்கனின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் உலக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.