சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு ஜரூராக திமுக தயாராகி வருகிறது.. ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே 2 விஷயங்களை கையில் எடுத்துள்ளது.. அதை செயல்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.
2 மாத காலம் கொரோனா தடுப்பு பணியிலேயே திமுக தன் முழு கவனத்தையும் திருப்பி வந்தது.. தற்போது உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களில் இறங்கி உள்ளது
கூட்டணி இன்னும் யாருடன் என்பது முடிவாகவில்லை.. வேல்முருகன் + விஜயகாந்த், இவர்கள் இருவரை நம்பி வடமாவட்டங்களில் வாக்குகளை அள்ளவும் யோசித்து வருகிறது.
ஸ்டாலின்
ஆனால், ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பேயே சில விஷயங்களை செய்துமுடிக்க திட்டமிட்டுள்ளாராம்.. அதில் முதலாவதாக, திமுகவை பலப்படுத்துவதுதான்.. அதாவது இப்போதைக்கு மாற்று கட்சியில் இருந்து ஏராளமானோர் திமுக பக்கம்தாவி வருகிறார்கள்.. மேலும் சிலரை வளைக்கும் வேலை நடந்து வருகிறது.. இன்றுகூட, 6 மாஜி எம்எல்ஏக்களும், ஒரு மாஜி அமைச்சரும்கூட திமுக பக்கம் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
எம்எல்ஏக்கள்
எனினும், மொத்தம் 15 அதிமுக எம்எல்ஏக்களை கொங்கு பகுதியில் இருந்து தட்டி தூக்க பிளான் உள்ளதாம்.. கொங்குவில் மட்டும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 25 அதிமுக எம்எல்ஏக்களை திமுக பக்கம் கொண்டு வரும் பிளானும் போடப்பட்டுள்ளதாம்.. இதற்கு காரணம், இப்போதைக்கு 66 எம்எல்ஏக்கள் அதிமுகவில் உள்ள நிலையில் குறைந்த பட்சம் 20 அல்லது 25-எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், தொங்கு அதிமுக உருவாகும் சூழல் ஏற்படும்..
தொங்கு அதிமுக
இதை வைத்து அதிமுகவை வீழ்த்தலாம் என்பதே அந்த முதலாவது பிளான் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் நடக்கிறதாம்.. எப்படியும் இனி திமுக ஆட்சிதான் என்பதாலும், கிடைத்த எம்எல்ஏ வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சில எம்எல்ஏக்களும் இதற்கு மனம் மாறி வருவதாக தெரிகிறது… அதுமட்டுமல்ல, இனியும் எடப்பாடியை நம்பி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றே இவர்கள் கருதுவதாக தெரிகிறது.
கட்டமைப்பு
அடுத்ததாக, 15 மாவட்டங்களில் திமுகவின் கட்டமைப்பையே மாற்றியமைக்கும் பணி முடுக்கிவிடப் போவதாக கூறப்படுகிறது.. இந்த பணியைதான் உதயநிதிக்கு அசைன்மென்ட்டாக தருவதற்கும் திமுக தலைமை யோசித்து வருகிறது.. அத்துடன் கட்சியினரை ஒழுங்குப்படுத்தி, பூசல்கள், உள்ளடி வேலைகளை இல்லாதவாறு சீர் செய்யும் பணியும் உதயநிதியிடம் ஸ்டாலின் விரைவில் தரப்போவதாக கூறுகிறார்கள்… இதற்கான அறிவிப்பும் விரைவில் வரலாம் என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பேயே அனைத்தையும் சரிசெய்துவிட வேண்டும் என்பதே திமுகவின் பிளானாம்.
உதயநிதி
அதாவது, முதலாவது பிளானுக்கு செந்தில்பாலாஜியும், இரண்டாவது பிளானுக்கு உதயநிதியும் களமிறக்கப்படுகிறார்கள்.. திமுகவின் இந்த அதிரடிகள் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.