Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஆனாலும் கனமழைக்கு வாய்ப்பிருக்கு..!!

images-5

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. மேலும், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏராளமான மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதும் வட தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp