சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை கடலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிட கூடாது என பாமக சார்பிலும், வன்னியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
சூரியா தனது 2D எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் காவல் உதவி ஆய்வாளர் வன்னியர் ஆக சித்தரிக்கப்பட்டு இருந்தார். அதற்கு பாமக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை வன்னியராக காட்டும் அக்கினி குண்ட காலண்டர் படத்திலிருந்து நீக்கப்பட்டது.
இநிலையில் வரும் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் வெளியிடக் கூடாது என பாமக சார்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளது.இந்த எச்சரிக்கை கடிதம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் விஜயவர்மன் சார்பில் அளிக்கப்பட்டிள்ள்து.
மிகுதியான வாக்கிய பிழைகளுடன் எழுதப்பட்டிருக்கும் அக்கடிதத்தில், சூர்யா படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபா படம் வெளிவந்த போது, பாமக ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் படத்தை திரையிட விடாமல் பாமகவினர் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவங்கள் நிகழ்ந்தன. அதுபோன்ற அசம்பாவிதங்கள் அதற்கும் துணிந்தவன் படத்துக்கும் நேருமோ என்ற அச்சத்தை இந்த கடிதம் எற்ப்படுத்தியுள்ளது.