
கோவையை அடுத்த கணுவாய் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கும், நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முருகன், மீனா ஆகியோரின் மகளான யாமினி என்ற பெண்ணுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெரியோரால் நிச்சயிக்கப்பட்டு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் யாமினிக்கு ஏற்கனவே சிவக்குமார் என்பவருடன் முதல் திருமணமாகி இருந்ததாகவும், இது அவரது பெற்றோருக்கு தெரிந்திருந்தும், இரண்டாவதாக யாமினிக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாகவும், யாமினி மீண்டும் முதல் கணவனுடன் சென்று விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
