புதுக்கோட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் முருகேசன்,இவர் புதுக்கோட்டையிலிருந்து தாராபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முருகேசனின் கார் தீடிரென கட்டுப்பாட்டை இழந்து இரகம்ட்டி பிரிவு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது,இதனால் அந்த மின்கம்பம் உடைந்தது.
அப்போது அதிஷ்டவசமாக முருகேசன் காரில் இருந்து குதித்து தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.இதற்கிடையில் மின்கம்பமானது உடைந்து காரின் மீது விழுந்து,கார் தீபிடித்து எரிந்தது.
இதனைப் பற்றி தகவல் அரிந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவர் ஜெயச்சந்திரம் தலைமையிலான தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர்.இந்த விபத்தை குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
