Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

சார்.. கரண்ட் பில் அதிகமா வந்திருக்கு.. குமுறிய நபர்.. கூப்பிட்டு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி

screenshot2702-1627539820

சென்னை: தமிழ்நாட்டில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்து 100 நாட்கள் ஆகிறது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அமலுக்கு வந்தபோதிலும் இந்த 100 நாட்களில் மக்கள் மத்தியில் மின்சாரத்துறை தான் அதிகம் விமர்சனங்களை சம்பாதித்து இருக்கிறது.இதே மாதிரி ஒரு ட்விட்டர் பதிவை ஒரு நெட்டிசன் வெளியிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதாகவும் மின்சாரத்துறை இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பலரும் ஏற்கனவே கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி விளக்கம்

ஆனால், அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாதது, அணில்கள் ஓடுவது போன்றவைதான் மின் வெட்டுக்கு காரணம் என்று, அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்தார். இதில் அணில் குறித்து செந்தில் பாலாஜி கூறிய கருத்தை வைத்து நிறைய மீம்ஸ் சுற்றி வருகிறது.

கெட்ட பெயர்

இந்த நிலையில்தான், தற்போது மின்துறைதான், மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது என்று நெட்டிசன் ஒருவர் கூறிய கருத்துக்கு ஜெய்சங்கர் என்ற நெட்டிசன் ஒருவர் பின்னூட்டமிட்டுள்ளார். அதில், சந்தேகமேயில்லை…. 500, 800, 1000 னு கட்டிகிட்டிருந்த நான் போன முறை 4000 க்கும் மேல், இந்த முறை 9000 க்கும் மேல்…. இதுக்கு ஒரு தீர்வு காணலனா கடினம் தான் என்று ட்வீட் வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்த செந்தில்பாலாஜி ஏன் இப்படி நடக்கிறது என்று விசாரிப்பதற்கு மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பழைய பில்லை கட்டியுள்ளீர்கள்

அதில் கிடைத்த தகவல்களை அந்த நெட்டிசனுக்கு, பதிலடியாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இதுகுறித்து விவரம்: சகோதரர் P.ஜெய்சங்கர் @APJ_Dravidan அவர்களுக்கு, தங்களுடைய பதிவில், மின் இணைப்பு எண் குறிப்பிடவில்லை. இருந்தபோதும், நிர்வாகத்தின் சார்பில், மின் வாரிய அதிகாரிகள் தங்களுடைய வீட்டிற்கு நேரில் வந்து கள ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், தாங்கள் கொரோனா பாதிப்பு காராணமாக, கடந்த 6வது மாத கணக்கீட்டிற்கு பதிலாக, கடந்த 2019 மே மாதம் தாங்கள் பயன்படுத்திய 430 ( 13580- 14010) யூனிட்டிற்கான கட்டணமான ரூ.920 யை கட்டியுள்ளீர்கள். தற்போது தங்களுடைய 8வது மாத கணக்கீட்டிற்கு, முறையாக ரீடிங் எடுக்கப்பட்டு, 1970 ( 19120 – 21090 )யூனிட்டிற்கான சரியான பயனீட்டு கட்டணமாக ரூ.9042 விதிக்கப்பட்டுள்ளது.

குழப்பம் ஏற்படுத்தும் பதிவு

இதே மின் இணைப்புக்கு, தாங்கள் 13.06.2017 அன்று ரூ.9370, 10.12.2018 அன்று ரூ.8535 என பல்வேறு தொகையை கட்டியுள்ளீர்கள். தற்போதைய சூழலில் தங்களுடைய இணைப்பு எண்ணிற்கான ரீடிங் சரியாக கணக்கிடப்பட்டு தான் இந்த தொகை வந்துள்ளது. தங்களுடைய மீட்டர் எண் : 3443737 மின் இணைப்பு எண் : 092340252611 இருந்தாலும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்த மாதிரியான பதிவுகளை பதிவிட்டுள்ளீர்கள். முறையான சந்தேகங்கள், புகார்களுக்கு எந்தேரத்திலும் சேவையாற்ற மின்வாரியம் தயாராகவே உள்ளது.

சமூக அக்கறை தேவை

இதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது தான், மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் – 94987 94987. அரசிற்கும், மின்வாரியத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தங்களது பதிவு அமைந்துள்ளது. எனவே சமூக அக்கறையுடன் கூடிய பதிவுகளை முன்னெடுத்து செல்லுங்கள். இவ்வாறு பதிலளித்துள்ளார் செந்தில் பாலாஜி.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp