சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி தள்ளியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. இந்தப் படம் நேற்று இரவு அமேஸான் பிரைமில் வெளியாகியுள்ளது.
இரவு முதலே படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி படம் பாஸிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது.
பிரபலங்கள் பாராட்டு
இதனால் #சார்பட்டாபரம்பரை என்ற ஹேஷ்டேக் இரவு முதல் ட்ரென்ட்டாகி வருகிறது. இதில் படத்தை பாராட்டி கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
கலைத்தாண்டவம் ஆடியிருக்கிறார்
அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில், சார்பட்டா பரம்பரை பார்த்தேன். ரோசமான மக்களின் ரோசமான வாழ்வியலை ஆக்ரோசமான கலையாக்கி பெரும் கலைத்தாண்டவம் ஆடியிருக்கிறார் அண்ணண் ரஞ்சித்.. அத்தனை உழைப்பு அத்தனை வியப்பு வாழ்த்துக்கள் அண்ணா. சாத்தியப்படுத்திய மொத்த படக்குழுவிற்கும் ப்ரியமும் அன்பும் என பதிவிட்டுள்ளார்.
என்னையும் அனுமதியுங்கள்
அவருடைய பதிவை பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மாரிசெல்வராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் அழகிய இல்லத்தில் என்னையும் படம் பார்க்க அனுமதிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷுடன் கர்ணன்
இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பரியேறும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடைசியாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.