சென்னை: கிட்டத்தட்ட 40 மாதங்களுக்கு பிறகு சென்னையில் தொற்றுக்கு யாருமே நேற்று உயிரிழக்கவில்லை.. இதனால் சுகாதார துறையினருக்கு ஒருவித திருப்தியும், சென்னைவாசிகளுக்கு ஒருவித நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.
2 மாதத்துக்கு முன்பிருந்தது போல் நிலைமை இல்லை.. அன்று ஆம்புலன்சிலேயே தொற்று நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது
ஆனால், திமுக அரசு மேற்கொண்ட பல்வேறு அதிரடிகள், அமைச்சர்களின் ஆய்வுகள், மாநகராட்சி பணியாளர்களின் தீவிரமான உழைப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால் தமிழகத்தில் தொற்று மெல்ல குறைந்து வருகிறது.
தீவிரம்
இருந்தாலும், கொங்கு பகுதிகளான அதாவது கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் இருந்து வருகின்றன.. அவைகளில் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கை மாறுபடுகிறது.. இதில் சென்னைதான் ஆச்சரியத்தை தந்து வருகிறது..
கலக்கம்
சென்னையில் கடந்த மே மாதத்தை எடுத்துக் கொண்டால், தினசரி பாதிப்பு எகிறி அடித்தது.. அதிலும், மே 12-ந்தேதி அதிகபட்சமாக 7,564 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.. இதனால், சென்னைவாசிகளுக்கு கலக்கம் சூழ்ந்தது.. அதைவிட உயிரிழப்புகளும் அதே மாதத்தில் அதிகமாகவே இருந்தன.. மே 5-ந்தேதி அன்று 107 பேர் அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே உயிரிழந்திருந்தனர்.
குறைவு
ஆனால், சென்னையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே தொற்று உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்தன.. கடந்த மாதம் 6-ந் தேதி அன்று 50 பேர் உயிரிழந்தனர்.. கடந்த மாத இறுதியில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது… நேற்று தமிழகம் முழுவதும் 47 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.. ஆனால், சென்னையில் யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
சுகாதாரதுறை
40 மாதங்களுக்கு பிறகு, சென்னையில் கொரோனா உயிரிழப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. இதனால், சென்னைவாசிகள் மட்டுமின்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியிலும் ஒருவித திருப்தியை தந்தள்ளது.. தொற்று எண்ணிக்கையும் சென்னையில் 177 பேருக்கு மட்டுமே நேற்று கண்டறியப்பட்டது.
உயிரிழப்புகள்
அது மட்டுமில்லை.. சென்னையை போலவே, அரியலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களிலும் தொற்று உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளன.. எனினும் மற்ற மாவட்டங்களில் ஒற்றை எண்ணிக்கையிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.