கோவை: கோவை மாநகரில் 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 32 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும், 24 துணை சுகாதார நிலையங்களிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவமனைகளிலும், 50 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும்,
137 அங்கன்வாடிகள் மற்றும் மண்டபங்களிலும் 10 மொபைல் முகாம்களிலும் 11 டிரான்ஸிட் முகாம்கள் (இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில்) மற்றும் 80 பிற இடங்கள் என மொத்தம் 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே, போலியோ செட்டு மருந்து முகாம்களில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள்,
கண்காணிப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். எனவே போலியோ சொட்டு மருந்து தினத்தன்று, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.