டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கிய அடுத்த 2 வாரங்களில் ஹார்ட் அட்டாக்கும், பக்கவாதம் வாதத்தால் பாதிக்கும் ஆபத்தும் அதிகம் உள்ளதாக ஒரு பகீர் ஆய்வு தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் தொற்று பரவி இருக்கிறது.. இதற்கான மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், முதல் பரவல் முடிந்து 2வது தொற்று பரவல் பரவி விட்டது.. 3வது அலையும் வந்து கொண்டிருக்கிறது.. தொடர்ந்து மனித குலம் பேரழிவில் சிக்கி தவித்து வருகிறது.. இதனால் உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.
நெருக்கடி
இந்த தொற்று பற்றி நாளுக்கு நாள் புது புது கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், ஆராய்ச்சிகள் தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.. அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.. இப்போதும் ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியாகியுள்ளது… அந்த ஆய்வின் முடிவுகள், ஆராய்ச்சிக் கட்டுரையாக தி லான்செட் என்ற இதழில் வெளியாகியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் உள்ள உமேயா பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
மாரடைப்பு
அதாவது ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கிய 2 வாரங்களில் அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்குவரை அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள்.. கடந்த பிப்ரவரி 1 முதல் செப்டம்பர் 14 வரை மேற்கொண்டன ஆய்வு முடிவில் இந்த பகீர் தெரியவந்துள்ளது… சுமார் 86, 742 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா பாதித்த இரண்டு வாரங்களில் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது.
நோய்கள்
சமூக, பொருளாதார மற்றும் வயது, பாலின அடிப்படையிலேயே இத்தகைய ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு, தாங்க முடியாத அளவுக்கு இருதய நோய்களை பலர் சந்திப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.. ஆராய்ச்சியாளர் காட்சூலாரிஸ் சொல்லும்போது, “கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியம் என்பதையே எங்களின் இந்த முடிவுகள் காட்டுகின்றன.. குறிப்பாக கடுமையான இதய பாதிப்பு ஆபத்தில் இருக்கிற முதியவர்கள் தடுப்பூசி போடுவது முக்கியம்” என்கிறார்.
ஆய்வு
அதுமட்டுமல்ல, அதிக அளவில் மாரடைப்பு, பக்கவாதத்திற்கு ஆளாவதில் பெரும்பாலானோர் முதியவர்கள்தானாம்.. ஏற்கனவே பக்கவாதம் அல்லது மாரடைப்பு அறிகுறி உள்ளவர்கள் இந்த ஆய்வில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டு, மற்றவர்களுக்குதான் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம். எனினும், தடுப்பூசி மட்டுமே இதுபோன்ற அபாயத்தை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதமாக இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.