Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

கிராம மக்களுக்கு ஈசியாக இருக்கும்.. சபாநாயகர் அப்பாவு வழங்கிய சூப்பர் யோசனை

appavu-1616304210-1620715266

திருநெல்வேலி : தாசில்தார்களுக்கு வழங்கியது போல் விஏஓக்களுக்கு அரசு சார்பில் செல்போன் வழங்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது தான் ஒருவர் பணி மாறிச்சென்றாலும் நிரந்தரமான எண் மூலம் புதிய கிராம நிர்வாக அதிகாரியை மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

ஊராட்சிகளின் இயக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் எனப்படும் விஏஓக்களின் பணி மகத்தானது. பிறப்பு இறப்பு பதிவு , அரசு மானியங்கள் பெற பொதுமக்களுக்கு பல்வேறு சான்றிதழ் வழங்குவது. கிராமத்தின் சொத்துக்களை பாதுகாப்பது, கிராமத்திற்கான வளர்ச்சி பணிகளுக்கு நிதியை பிரித்து வழங்குவது, பொதுமக்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பது வரை பல்வேறு பணிகள் செய்கிறார்கள்.

தினமும் பொதுமக்கள் அதிகம் சந்திக்கும் நபர் கிராம நிர்வாக அலுவலர் எனப்படும் விஏஓக்கள் தான். இவர்களை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களுக்கு அரசு செல்போன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைய சபாநாயகர் அப்பாவு வைத்துள்ளார்.

காலி பணியிடங்கள்

இது தொடர்பாக அப்பாவு கூறுகையில். ” தமிழ்நாட்டில் மொத்தம் 12754 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் 12618 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு உதவியாக செயல்படும் கிராம உதவியாளர்களில் 2 ஆயிரத்து 726 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

விஏஓக்களுக்கு செல்போன்

தாசில்தார்களுக்கு அரசு செல்போன் வழங்கியுள்ளது போல், விஏஓக்கள் அனைவருக்கும் நிரந்தர செல்போன் எண் வழங்க வேண்டும். இதன் மூலம் ஒருவர பணிமாறிச் சென்றாலும் புதிய கிராம நிர்வாக அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும்.

முதியோர் உதவித்தொகை

தமிழகத்தில் தற்போது 60 வயதை கடந்த 30 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. செல்வந்தர்கள் தவிர மேலும் ஒரு கோடி பேருக்கு முதியோர் உதவித்தொகை தேவைப்படும் சூழ்நிலை உள்ளது. இவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கினால் வருடத்திற்கு 12 ஆயிரம் கோடி தேவைப்படும்” இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்,.

விரைவில் தேர்வு

இதனிடையே நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் துறை அமைச்சர் கேகே எஸ்எஸ் ஆர் ராமசந்திரன்,தமிழகத்தில் விஏஒக்கள் காலி பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை கேட்டுள்ளோம். கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளது. காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதேபோல கிராம உதவியாளர் பணியிடங்கள் 2 ஆயிரம் காலியாக உள்ளது. இந்த இடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றார்-

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp