சென்னை : மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா தயாரிப்பில் உருவாகியுள்ளது நவரசா ஆந்தாலஜி.நவரசங்களை குறிப்பிடும்வகையில் 9 படங்களை இணைத்து இந்த நவரசா ஆந்தாலஜி உருவாக்கப்பட்டுள்ளது.இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் அவரது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு உதவி
இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா தயாரிப்பில் நவரசா ஆந்தாலஜி உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதில் அனைவரும் சம்பளமின்றி பணிபுரிந்துள்ளனர்.
நவரசங்கள் -9 படங்கள்
இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நவரசங்களை குறிப்பிடும்வகையில் இதில் 9 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கௌதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் படங்களை இயக்கியுள்ளனர்.
சூர்யா நடிப்பு
இந்த படங்களில் சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எந்த நடிகர் எந்த இயக்குநரின் படத்தில் நடித்துள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் கௌதம் மேனன் படத்தில் நடிகர் சூர்யா, பிரயாகா மார்ட்டின் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.
சூர்யா கதையின் தலைப்பு
இந்த கதைக்கு தற்போது கிடார் கம்பி மேலே நின்று என்று தலைப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதை 38 நிமிடங்கள் ஓடக்கூடியதாகவும் இதில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நவரசா ஆந்தாலஜி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.