இதே பகுதியைச் சார்ந்த தனியார் பால் வாகன டிரைவர் மணிகண்டன் (22) என்பருக்கும், கோவிந்தராஜ் மனைவி பிரீதாவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான காதல் முற்றிய நிலையில், மணிகண்டன் பிரீத்தாவை அழைத்துக்கொண்டு, கடந்த 15ஆம் தேதி ஊரை விட்டுச் சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பிரீத்தாவின் கணவர் கோவிந்தராஜ், சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில், கடந்த 16ம் தேதி புகார் செய்துள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இருவரது செல்போன் எண்களை டிரேஸ் செய்யும் போது, அவர்கள் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. இருவரையும் மீட்டு சிந்தாமணிபட்டி காவல் நிலையத்திற்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் கொண்டு வந்துள்ளனர். அப்போது, மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்த, கோவிந்தராஜ், காவல் நிலையத்தில் உள்ள மனைவி பிரீத்தாவை சந்திக்க முற்பட்டபோது, காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்ராதேவி அதற்கு அனுமதிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மேலும் பிரீத்தாவின் கள்ளக்காதலில் விழுந்த மணிகண்டனின் உறவினர் நீதிமன்ற அலுவலகத்தில் பணி புரிவதாகவும், மனித உரிமையை மீறி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சித்ராதேவி கணவரை மிரட்டியதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.