
திருவண்ணாமலை: செங்கம் அருகேகள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த ஆலப்புத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் மகள் பவானி திருமணமாகி கணவருடன் வாழாமல் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள இளைஞருடன் உடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த பவானி கர்ப்பமான நிலையில் நேற்று இரவு பவானிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பவானியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பவானியின் பாட்டி கோவிந்தம்மாள் பிரசவம் பார்த்துள்ளார். பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கிணற்று மேட்டில் குழந்தை இறந்த நிலையில் கிடந்த சம்பவம் சமக வலைதளங்களில் வைரலாகியது. இதனால் அப்பகுதியில் கர்ப்பமாக இருந்தது பவானி என தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்த போது, பவானிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.