Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

கடிதம் எழுதிய உதயநிதி.. உடனே ஆக்சன் எடுத்த சென்னை மாநகராட்சி.. சேப்பாக்கத்தில் சூப்பர் திட்டம்

udhay450-1617696908-1628060780

சென்னை : பழுதான நிலையில் மழைநீர் வடிகால்கள் உள்ளதால் சீரமைக்க வேணடும் என்று சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் பேரில் உடனே ஆக்சனில் இறங்கிய சென்னை மாநகராட்சி,. ரூ.40 கோடியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால் அமைக்க போகிறது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். அதில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் முறையான வடிகால் வசதி இல்லை.

சிறிய மழைக்கே தண்ணீர் தேங்குகிறது. பார்த்தசாரதி கோயில் குளம், மழைநீர் சேகரிப்பு இல்லாமல் இருக்கிறது. அதை மழைநீர் தேங்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று உதயநிதி குறிப்பிட்டிருந்தார்.

ஜெர்மன் தொழில்நுட்பம்

இந்த கடிதத்தின் பேரில் உடனே ஆக்சனில் இறங்கிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.40 கோடி செலவில் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி மற்றும் ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால் அமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள்

இதுபற்றி சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் கூறும் போது, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் பழமையான மழைநீர் வடிகால்கள் பழுதடைந்துவிட்டன. மழைநீர் வடிகால்களை சீரமைக்கவும், மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பு வழங்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளத்தில் மழைநீர் சேமிக்கும் வகையில் ஜெர்மன் தொழில் நுட்பத்திலான வடிகால்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், சாலை மட்டத்தில் இருந்து 4 அடி ஆழம், 19 அடி நீளம், 3.4 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்பட உள்ளது. பள்ளத்திற்குள் 6 முதல் 10 எம்.எம். கன அளவுள்ள பொடி ஜல்லி கற்கள், 1.5 செ.மீ உயரத்திற்கு நிரப்பப்படும். அதன்மேல் 400 ஜி.எஸ்.எம் அடர்த்தி கொண்ட ஜியோ பில்டர் எனும் பேப்ரிக் கிளாத் விரிக்கப்படும்.

டனல் வைக்கப்படும்

பின் ஜெர்மன் தயாரிப்பான பாலிபுரோபோலின் என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்கால் ஆன 3.9 அடி நீளம், 500 மி.மீ, உயரம், 80 மி.மீ அகலமுள்ள டனல் வைக்கப்படும். இப்பணி முடிக்கப்பட்டவுடன், 20 அடி நீளத்திற்கு மட்டும் 5 டனல் வைக்கப்படும். அதன் மேல் மீண்டும் ஜியோ பில்டர் பேப்ரிங் கிளாத் போர்த்தப்பட்டு டனல் மூடப்படும். பக்கவாட்டில் உள்ள பள்ளங்களில் 20 எம்.எம். ஜல்லி, டனல் உயரத்திற்கு கொட்டி இடைவெளிகள் மூடப்படும்.

விரைவில் பணிகள்

அதன்மேல் சாலை மட்டத்திற்கு கிராவல் கல் பதிக்கப்பட்டு அதன் இடைவெளியில் மணல் கொட்டி புற்கள் வளர்க்கப்படும். இதனால் வடிகாலுக்கு செல்லும் மழைநீர் சகதிகள் வடிக்கப்பட்டு சுத்தமான நீராக குளங்களுக்கு சென்றுவிடும். இப்பணிகளுக்கு மிக குறுகிய இடம் தான் தேவைப்படும் என்பதால் விரைவிலேயே பார்த்தசாரதி கோயிலில் இப்பணிகள் முடிக்கப்படும்” இவ்வாறு கூறினார்கள் .

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp