கோவை: கோவை ஆலாத்துறையை அடித்த வடிவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதுடைய கமலாத்தாள் பாட்டி கடந்த 30 ஆண்டுகளாக அந்த பகுதியில் 1 ரூபாய்க்கு இட்லி விற்ப்பனை செய்து வருகிறார்.

இவர் செய்கின்ற இந்த இலாப மற்ற நோக்கத்திற்கு பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள், வரை அனைவரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நற்செயலுக்காக கமலாத்தாள் பாட்டி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.அந்த வகையில் திருமலையாம்பாளையம்,பகுதியிலுள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கமலாத்தாள் பாட்டி அவர்களுக்கு விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராக,தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துக் கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். அப்போது கமலாத்தாள் பாட்டிக்கு விருது வழங்கியது மட்டுமின்றி அவரை நலம் விசாரித்து,கட்டித்தழுவி கொஞ்சினார்.
ஒரு ரூபாய் இட்லி விற்பனை செய்து வந்த இந்த பாட்டியை அரிந்து வைத்தது மட்டுமின்றி,அவரை கட்டித்தழுவி கொஞ்சியது காண்போரை நெகிழ்வடையச் செய்தது. இந்நிகழ்ச்சியில் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குடும்பத்தின் முதன்மை செயலாளர் மற்றும் கல்வி அதிகாரி கிருஷ்ண குமார்,தலைவர் கிருஷ்ண தாஸ் மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
