கோவை: கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (53). இவர் வீட்டுக்கு முன்பு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த முதியவர் சிறுமிகளிடம் பேச்சுக் கொடுத்தார். மேலும் தான் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு சிறுமியை தூக்கிச் சென்று சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் முதியவர் சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியின் பெற்றோரிடம் காண்பித்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதை கேட்டதும் சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியாகி உடனடியாக சம்பவம் குறித்து சரவணம் பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜாகிர் உசேன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தெரியவந்தது. மேலும் இது போக்சோ வழக்கு என்பதால் வழக்கு கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் ஜாகீர்உசேன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.