திருச்சி: பொன்மலைப்பட்டி அருகே 16 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியின் பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ஹரீஷ் என்ற சூரியபிரகாஷ், அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிறுமையை காதலித்ததற்காகவும், ஏமாற்றி கர்ப்பமாக்கியதற்கும் சூரிய பிரகாஷ் மீது பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சூரியகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.