உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தியதில் காயமடைந்த கர்ப்பிணி பெண் மற்றும் வயிற்றில் இருந்த சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த்து,அந்த பகுதியை மேலும் சோகத்தை ஏற்படித்தியுள்ளது.
உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் ரஷ்யா கடந்த 10-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நகரங்களை ரஷ்யா கைபற்றிவிட்டதாக என்று கூறப்படும் நிலையில்,இன்று வரையிலும் அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் உக்ரைனில் உள்ள மரியுபோல் என்ற பகுதியில் மகப்பேறு மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.மேலும் இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயம் அடைந்த,நிலையில் அந்த கர்ப்பிணியை உக்ரைன் இராணுவத்தினர் ஸ்டெச்சரில் வைத்துக் கொண்டு சென்ற புகைப்படம்,அந்நாட்டு மக்களை பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் உயிரிழந்துவிட்டதாகவும்,வயிற்றில் இருந்த குழந்தையும் பலியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மரியுபோல் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.