ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவும் போர்ச்சூழல் மற்றும் பதற்றங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் உக்ரைனுக்கு சென்றுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவும் போர்ச்சூழல் மற்றும் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே அங்கிருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவித்தது.
இதனைதொடர்ந்து, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் உக்ரைனுக்கு சென்றுள்ளது. 200க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட ட்ரீம்லைனர் பி-787 விமானம் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு விமானம் செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் தரையிறங்குகிறது. 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். உக்ரைனுக்கு புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை மீதான கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் நீக்கிய நிலையில், ஏர் இந்தியா பிப்ரவரி 18 அன்று இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்குவதாக அறிவித்தது.