Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

இயற்கைவழி வேளாண்மை

137835

வரலாறு

மசனோபு ஃப்யூகூவோகா (1913-2008) தத்துவ ஞானி மற்றும் விவசாயி். 1975ல் இவர் எழுதிய ”வைக்கோல் புரட்சி (straw revolution)” என்ற நூல் பிரசுரமாகியது. இதில் ”எதுவும் செய்யாதே” என்று விவரிக்கிறார். ஏதும் செய்யாதெ என்றால் முயற்சி ஏதும் செய்யக்கூடாது என்ற அர்த்தம் அன்று. பதிலாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு ஃபுயூகோகாமுறை என்றும் பெயர் உண்டு். இயற்கைவழி வளத்தை வளர்ப்பு வேளாண்மை (fertility farming) , கரிம வேளாண்மை (organic farming), நீடித்த வேளாண்மை (sustainable agriculture), வேளாண்காடு வளர்ப்பு (agroforestry), சுற்றுச்சூழல் வேளாண்மை (ecoagriculture), வாழ்முறை (permaculture) ஆகியவற்றுடன் மிக்கத் தொடர்புடையது ஆனால் உயிராற்றல் (உயிரோட்ட/biodynamic agriculture) வேளாண்மையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் .

இந்த முறை ஒவ்வொரு சூழலிலும் ஒரு உயிரினம் சிக்கலாக இருந்து அந்தச் சூழ்நிலையை வடிவமைப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. இவர் விவசாயத்தை உணவு மற்றும் ஆன்மீக (அழகு) அணுகு முறை என இரு வேளாண்மையாகப் பார்க்கிறார். சாகுபடி மற்றும் மனித முழுமைதான் தன்னுடைய இறுதி இலக்கு என்று கூறுகிறார். இந்த முறையில் வெற்றியடைய உள்ளூர் நிலைமைகளைக் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். மேலும், இயற்கைவழி விவசாயம் ஒரு மூடிய அமைப்பு, மனித உள்ளீடுகள் இல்லாமல் இயற்கையை ஒட்டி இருக்க வேன்டும். ஃப்யூகூவோகாவின் கருத்துக்கள் நவீன வேளாண் தொழிற்சாலைகளுக்கு ஒரு சவாலாக இருந்தது. இயற்கைவழி விவசாயம், வழக்கமான கரிம வேளாண்மை(organic farming) மாறுபடுபதாகவும், கரிம வேளண்மை இயற்கையை பாதிபதாகவும் நினைக்கிறார். இவருடைய முறை நீர் மாசுபாடு தடுப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் மண் அரித்தழிப்பு தடுப்பு ஆகிய நன்மைகளுடன் போதுமான உணவும் கிடைக்கின்றன என அடித்துரைக்கிறார்

இயற்கை வேளாண்மை ஏன் தேவைப்படுகிறது?

நமது பண்டையகால வேளாண்மை இல்க்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும், அகழ்வாராய்ச்சிகளாலும் ஐயாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது என அறியப்படுகிறது. இந்த விவசாயத்தினால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவு கொடுக்க முடியவில்லை. இ்ரசாயன உரங்களினாலும், பூச்சிமருந்துகளாலும் உணவுச்சங்கிலியில் நஞ்சுகளாகப்பட்டு அதிக அளவில் (bioconcentration) சேமிக்கப்பட்டு பல வகையான புற்றுநோய், காலநிலை மாறுபாடு, மண்ணின் வளம் குன்றுதல், சில உயிரினங்கள் முற்றிலுமாக அழிதல், இரசாயன பூச்சி மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மை, சிறுபான்மை பூச்சிகள் பெரும்பான்மை பூச்சிகளாக மாறுதல், சாகுபடிச் செலவுகள் அதிகரித்தல் மற்றும் விவசாயிகளின் தற்கொலை போன்ற பாதகங்கள் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் நவீன இயற்கையோடு ஒன்றிய விஞ்ஞான உத்திகளைக்கொண்டு நல்ல தரமான அதிகப்படியான மகசூல் எடுக்கவேண்டும். பொருளியல் அறிஞர்’ ஜே.சி. குமரப்பா காந்தியடிகளின் நண்பர். இவர் 1940களில் மரபு வேளாண்மையை இயற்கையோடு இணைத்து நவீனப்படுத்த விரும்பினார். மக்கும் உரம் தயாரித்தல், பண்ணை மேலாண்மை பணிகளைத் திட்டமிடுவது, டிராக்டர் வருகையின் ஆபத்து, ரசாயன உரங்களின் தீமை போன்றவற்றை அன்றே கண்டுபிடித்து விளக்கினார்.

இதற்கிடையில் முருகப்பா குழுமத்தில் இருந்த சேஷாத்ரி என்பவர், காய்கறிச் சாகுபடியில் இருமடி பாத்தி என்ற நுட்பத்தை ஐரோப்பிய அமைப்பு ஒன்றின் துணையுடன் பரப்பி வந்தார். புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் என்ற அமைப்பின் சார்பாகப் பல உத்திகள் கையாளப்பட்டன

முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை

  1. செயற்கை உரம்
  2. செயற்கை  பூச்சிக்கொல்லி மருந்துகள்
  3. செயற்கை வளர்ச்சி ஊக்கிகள்
  4. உயிர் எதிரி கொண்ட  எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை)
  5. மரபணு மாற்றப்பட்ட உயிரினம்  
  6. மனித சாக்கடைக்கழிவுகள் 

கடைப்பிடிக்க வேண்டியவை

  1. உயிர் உரங்கள்
  2. பசுந்தாள் உரம்
  3. பசுந்தழை உரம்
  4. மக்கிய இயற்கை உரம்
  5. பஞ்சகவ்யம் தெளித்தல்
  6. பயிர்சுழற்சி
  7. உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை)நிர்வாகம்
  8. சொட்டு நீர்பாசணம்

விளைவிக்கப்பட்ட பொருட்களின் தரம்

இரசாயன முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் தரம் குரைந்த புரதச்சத்து் அதிகமாக இருக்கும். தரம் குரைந்த புரதச்சத்துக்களால் புற்று நோய் ஏற்பட வாய்புள்ளது, மாவுச்சத்து, கொழுப்பு அமிலம் போன்ற சத்துக்ளின் அளவு சமமாகவும் இருக்கலாம். மற்ற சதுக்களான சுண்ணாம்ப்பு, உயிர் சத்துக்கள், நுண்ணூட்ட சத்துக்கள் ஆகியவை குறைவாக இருக்கும் இதனால் இரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் அதிக அளவில் நுண்சத்துகள் நிரம்பி இருக்கும்

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp