சென்னை: ஆக்ஷன், ரொமான்ஸ் எல்லாம் பண்ணி ரொம்ப போரடிச்சுடுச்சாம்.. ரசிகர்களை சிரிக்க வைக்க முழுக்க முழுக்க பக்கா ஜாலியான காமெடி என்டர்டெயின்மென்ட் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.
வைகைப் புயல் வடிவேலுவின் எலி படத்தை இயக்கிய இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவும் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நயனின் நெற்றிக்கண்
சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான பேய் படம் ‘அவள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி உள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான “இதுவும் கடந்து போகும்” பாடல் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக பலருக்கும் உதவி வருகிறது.
அண்ணாத்த ஹீரோயின்
இந்த தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் அண்ணாத்த திரைப்படத்தை இறக்கி அதகளம் செய்ய உள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாரா தான் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாம். சந்திரமுகி, குசேலன், தர்பார் அடுத்து அண்ணாத்த!
ஷாருக்கான் ஜோடி
இனிமேல் ஹீரோயினாக எந்த ஹீரோ கூடவும் நடிக்கப் போறதில்லை என நடிகை நயன்தாரா அதிரடியாக சொன்னதாக ஒரு தகவல் வேகமாக பரவியது. ஆனால், அடுத்த நொடியே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு நம்ம அட்லி படத்தில் ஜோடியே இவர் தான் என செய்திகள் நாடு முழுவதும் குவிந்தன. இன்னமும் அட்லி படத்திற்கே ஷாருக்கான் பச்சைக் கொடி காட்டியதாக தெரியவில்லை என்பது வேறு கதை.
இம்சை அரசியாக
ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ணியும், உமன் சென்ட்ரிக் கதாபாத்திரத்தில் சோலோ ஹீரோயினாக ஆக்ஷனில் கலக்கியும் நடிகை நயன்தாராவுக்கு போர் அடித்து விட்டதாம். முழுக்க முழுக்க ஒரு ஜாலியான என்டர்டெயின்மென்ட் படத்தை பண்ணி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்க இம்சை அரசியாக மாறப் போவதாக தற்போது புதுத் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
வில்லு, சத்தியம்
நடிகை நயன்தாரா ஏற்கனவே தளபதி விஜய்யின் வில்லு மற்றும் விஷாலின் சத்தியம் உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கி இருப்பார். இந்நிலையில், முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால் நிச்சயம் குழந்தைகளை டார்கெட் செய்து தான் இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலி பட இயக்குநருடன்
அதற்காக காமெடி படமான எலி படத்தை இயக்கிய இயக்குநர் யுவராஜ் தயாளன் உடன் இணைந்து புதிதாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம் நம்ம லேடி சூப்பர்ஸ்டார். படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
காதலருடன்
நெற்றிக்கண், அண்ணாத்த படங்களை தொடர்ந்து காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை அடுத்த ஆண்டு காதலர் தினத்துக்கு கொண்டு வர தீவிர முயற்சிகளும் நடைபெற்று வருகிறதாம்.