Lenovo நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்மார்ட் ஃபோன் பிராண்டான மோட்டோரோலா தனது புதிய மோட்டோ எட்ஜ் 30 ப்ரோவை (Motorola Edge 30 Pro) கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் நேற்று முதல் (மார்ச் 4) இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புத்தம் புதிய Motorola Edge 30 Pro மொபைல் Flipkart-ல் நேற்று மதியம் முதல் விற்பனைக்கு வந்து உள்ளது.
இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 ஆக்டாகோர் ப்ராசஸர் (Snapdragon 8 Gen 1 octa-core processor) மூலம் இயக்கப்படும். மோட்டோரோலா நிறுவனம் இந்த டிவைஸிற்கு 2 வருட OS அப்டேட்டை வழங்குவதாக உறுதி அளித்து உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

இந்த மொபைல் Flipkart-ல் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிற ரீட்டெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோவின் விலை எவ்வளவு, என்ன சலுகைகளை பெறலாம் மற்றும் இந்த மொபைலின் அம்சங்கள் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள் உள்ளிட்டவற்றை பற்றி பார்ப்போம்.
Motorola Edge 30 Pro-வின் விலை மற்றும் சலுகைகள்:
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.49,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் காஸ்மோஸ் புளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் ஒயிட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த மொபைலை வாங்குபவர்கள் SBI கிரெடிட் கார்டை பயன்படுத்துவதன் மூலம் ரூ.5,000 தள்ளுபடியை பெறலாம். மேலும் இந்த மொபைலை வாங்குவோருக்கு Flipkart Axis Bank கிரெடிட் கார்டுகளில் 5% கேஷ்பேக் சலுகையையும் Flipkart வழங்குகிறது. தவிர யூஸர்கள் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவில் கட்டணமில்லா EMI-ஐ (no-cost EMI) பெறலாம்.

Motorola Edge 30 Pro-வின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:
இந்த மொபைல்144Hz ரெஃப்ரஷ் ரெட் மாறும் 6.7-இன்ச் full-HD+ OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் Snapdragon 8 Gen 1 சிப்செட்டானது 8GB LPDDR5 ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனில் 4,800mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இது 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. OIS உடன் 50MP பிரைமரி லென்ஸ், 50MP அல்ட்ரா-வைட் மற்றும் 2MP மேக்ரோ கேமராக்கள் கொண்ட டிரிபிள் கேமரா செட்-அப் கொடுக்கப்பட்டு உள்ளது.
செல்ஃபிகளுக்காக 60MP ஃப்ரன்ட் கேமரா இருக்கிறது. மேலும் இந்த மொபைல் 8K ரெசல்யூஷன், 4K HDR10+ வீடியோ ரெக்கார்டிங் ஆப்ஷன்களுடன் வீடியோக்களை ரெக்கார்ட் செய்யும் திறன் கொண்டது. பிரீமியம் சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸிற்காக Dolby Atmos ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மொபைலானது 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, GPS/ A-GPS, NFC மற்றும் USB வகை-C போர்ட் உள்ளிட்டவற்றுடன் வருகிறது.
