டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 41,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதால் ஒருநாள் பாதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. ஒருநாள் பாதிப்பில் நேற்று அமெரிக்கா (56,525), பிரேசில் (54,748), இங்கிலாந்து (44,104) என முதல் 3 இடங்களில் இருந்தன.
இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 42,015 ஆக இருந்தது. இந்தியாவில் கடந்த 19-ந் தேதியன்று ஒரு நாள் பாதிப்பு 38,164 ஆகவும் கடந்த 20-ந் தேதி 30,093 ஆகவும் குறைந்திருந்தது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
ஆனால் கடந்த 2 நாட்களாக திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 41,383 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ண்ணிக்கை 3,12,57,720 ஆக உள்ளது.

எத்தனை பேர் மீண்டனர்?
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,652. இதுவரை மொத்தம் 3,04,29,339 பேர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர்.

507 பேர் மரணம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 507. நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,18,987.

அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை – அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,09,394. இது கடந்த 19-ந் தேதியன்று 3.89 லட்சமாக இருந்தது. இதுவரை இந்தியா முழுவதும் மொத்தம் 41.78 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.