டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000-ஐ தாண்டியது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000-ஐ தாண்டியுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் நேற்று 3,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,509லிருந்து 15,208ஆக உயர்ந்துள்ளது. இது 0.03 சதவீதமாகும். கொரோனாவில் இருந்து நேற்று 1,396 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று 1,390 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,41,69,711 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.