கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மந்தமடைந்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகம் நாட்டின் வர்த்தக சந்தையை ஊக்குவிக்கப் புதிதாக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு, கட்டுமானம், உற்பத்தித் துறையை மட்டுமே சார்ந்து இருந்த நிலையில், தற்போது சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் அதிகளவிலான முக்கியத்துவம் அளித்துள்ளது மத்திய நிதியமைச்சகம்.
5 லட்சம் இலவச விசா
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மொத்தமாகக் குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவலசமாக விசா வழங்க உள்ளது மத்திய நிதியமைச்சகம்.
1 கோடி சற்றுலா பயணிகள்
2019ஆம் ஆண்டில் 10.93 மில்லியன் வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்குச் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர். இப்படி 2019ல் வந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 30.098 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் தங்குவதற்காகவும், சாப்பிடுவதற்காகவும், வர்த்தகத்திற்காகவும் செலவு செய்துள்ளனர்.
ஒரு நாளுக்கு 2,400 ரூபாய்
மேலும் இந்தியா வந்துள்ள சற்றுலா பயணிகள் சராசரியாக 21 நாட்கள் இந்தியாவில் தங்குகின்றனர். இதேபோல் சுற்றுலா பயணிகள் ஒரு நாளுக்கு சாரசரியாக 34 டாலர் செலவு செய்துள்ளனர், அதாவது ஒரு நாளுக்கு 2,400 ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்துள்ளனர்.
இலவச விசா
இந்நிலையில் இந்திய அரசு வெளிநாட்டு சற்றிலா பயணிகளுக்கு விசா வழங்கத் துவங்கியதும் 5 லட்சம் இலவச விசா வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுலாத் துறை வர்த்தகம் மேம்பட்டு நாட்டின் வர்த்தகம் வளர்ச்சி அடையத் துவங்கும்.