சென்னை : சென்னையில் கண்காணிப்புக்குழுக்களின் ஆய்வின்போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பதும் தெரியவந்தால் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் கொரோனா பாதுகாப்ப வழிமுறைகளை வழக்கம் போல் மறந்துவிட்டனர். சமூக இடைவெளியை மறந்து முககவசம மறந்து கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் செய்கிறார்கள். ஜாலியாக பொது
இதனிடையே உலக சுகாதார மையம் 3வது அலையின் தொடக்கத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது. இதனால் 3வது அலை பரவலை தடுக்க வேண்டும் எனில் மக்கள் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து செயல்பட வேண்டும்.
சென்னை
அத்துடன் கொரோனா விரட்டுவதற்கு என்று உள்ள நிலையான பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். இதை மக்களிடம் உணர்த்த விரும்பும் சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கண்காணிப்பு குழு ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : ” தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அங்கு பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வணிகவளாகங்கள்
கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகளில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடித்து, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படுகின்றனவா? என சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
கடைகளுக்கு எச்சரிக்கை
கண்காணிப்புக்குழுக்களின் ஆய்வின்போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பதும் தெரியவந்தால் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுமக்கள் கூடும் இடங்கள்
எனவே, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.