Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா.. மதுசூதனனின் உடல்நிலையை விசாரிக்க அப்பல்லோவுக்கு விசிட்!

sasikalaa480-1626327356

சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் உடல்நலம் குறித்து விசாரிக்க சசிகலா அப்பல்லோ மருத்துவமனை வந்தார். அவர் அதிமுக கொடி கட்டிய காரில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மருத்துவமனையில் விசாரித்தார். இன்றைய தினம் அப்பல்லோ மருத்துவமனைக்கு சசிகலா வந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அங்கு வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

சில ஆண்டுகளாகவே அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இதையடுத்து இன்றைய தினம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

முன்னறிவிப்பு

அப்போது திடீரென சசிகலாவும் முன்னறிவிப்பு ஏதும் இன்றி அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவர் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்றார். மருத்துவர்கள் மற்றும் மதுசூதனனின் குடும்பத்தினரிடம் உடல்நிலை குறித்து சசிகலா கேட்டறிந்தார்.

அதிமுக கொடி

சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்கு அதிமுக கொடி பொருத்திய காரில் வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த சசிகலா தனது காரில் அதிமுக கொடி கட்டி சென்ற நிலையில் அதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி

சசிகலா மருத்துவமனைக்கு வந்த போது அங்கு எடப்பாடி பழனிச்சாமியும் இருந்தார். இதனால் சசிகலா வருவதை அறிந்து அவசர அவசரமாக விசாரித்துவிட்டு எடப்பாடி வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp