Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

அடேங்கப்பா.. நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகைக்கு தேசிய விருது கொடுத்துருக்காங்க.. வேற லெவல்!

Urvashi_Rautela_Instagram_Photo

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு ஸ்ரீசக்தி தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்களை ஷேர் செய்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.

மகாரஷ்ட்ரா ஆளுநர் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு இந்த விருதை வழங்கி உள்ளார்.

ஸ்ரீசக்தி தேசிய விருது

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பிரபலங்களுக்கு ஆண்டு தோறும் ஸ்ரீசக்தி தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஸ்ரீசக்தி தேசிய விருது நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீசக்தி தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.

மகாராஷ்ட்ரா ஆளுநர்

மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு இந்த விருதை வழங்கி உள்ளார். மஞ்சள் நிற சேலையில் தங்க நிற தேவதையாக ஜொலித்த படி ஆளுநர் கையால் இந்த தேசிய விருதை நடிகை ஊர்வசி ரவுத்தேலா பெற்றுள்ளார்.

47 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

சினிமாவை தாண்டி பொது பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் நம்ம விர்ஜின் பானுப்பிரியா பட நடிகை. சமீபத்தில் கொரொனா இரண்டாவது அலையில் மக்கள் பெரும் துயரில் வாடிய போது 47 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கிக் கொடுத்தார். மேலும், பொதுமக்கள் மற்றும் தெரு நாய்களுக்கு உணவளித்தும் மகிழ்ந்தார்.

மண் குளியல்

சமீபத்தில் மேலாடை ஏதும் அணியாமல் மண் குளியல் போட்ட ஊர்வசி ரவுத்தேலாவின் புகைப்படங்கள், இணையத்தில் டிரெண்டாகின. பாலிவுட் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வியந்து அந்த போட்டோக்களை லைக் செய்து கமெண்ட் செய்தனர். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என ஏகப்பட்ட படங்களிலும் வீடியோ பாடல்களிலும் நடித்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா.

அண்ணாச்சி ஹீரோயின்

திருட்டுப் பயலே 2 இந்தி ரீமேக், பிளாக் ரோஸ் தெலுங்கு படம் என பிசியாகி வரும் ஊர்வசி ரவுத்தேலா லெஜண்ட் சரவணன் அருளின் பிரம்மாண்ட படத்தில் ஹீரோயினாக தமிழில் விரைவில் அறிமுகமாக உள்ளார். இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் அந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp